Old/New Testament
ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு
1 ஆதாம், சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா.
4 சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் மகன்கள்.
யாப்பேத்தின் சந்ததியினர்
5 கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் மகன்கள்.
6 அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா, ஆகியோர் கோமரின் மகன்கள்.
7 எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.
காமின் சந்ததியினர்
8 கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் ஆகியோர் காமின் மகன்களாவார்கள்.
9 சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா ஆகியோர் கூஷின் மகன்களாவார்கள். சேபா, திதான், ஆகியோர் ராமாவின் மகன்களாவார்கள்.
10 நிம்ரோதின் சந்ததியான கூஷ், வளர்ந்து பலமுள்ள தைரியமிக்க வீரனாக உலகில் விளங்கினான்.
11 லுதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயிம் (எகிப்து) 12 மேலும் மிஸ்ராயும் பத்ரூசியர், கஸ்லூகியர் கப்தோரியர் ஆகியோருக்கும் தந்தை (பெலிஸ்தியர்கள் கஸ்லூகியரிலிருந்து வந்தவர்கள்.)
13 கானான் சீதோனின் தந்தை ஆவான். சீதோன் இவனது மூத்த மகன். கானான் சீதோனுக்கும் கேத்துக்கும் தந்தை ஆவான். 14 அவன் எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும் 15 ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும், 16 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
சேமின் சந்ததியினர்
17 ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் ஆகியோர் சேமின் மகன்களாவார்கள்.
18 அர்பக்சாத் சாலாவின் தந்தை. சாலா ஏபேரின் தந்தை.
19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு மகனின் பெயர், பேலேகு ஆகும். ஏனென்றால், இவனது வாழ்நாளில் தான் பூமியிலுள்ள ஜனங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டனர். பேலேகின் சகோதரனது பெயர் யொக்தான் ஆகும். 20 அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராகை, 21 அதோராம், ஊசால், திக்லா, 22 ஏபால், அபிமாவேல், சேபா, 23 ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரை யொக்தான் பெற்றான். கீழ்க்கண்ட அனைவரும் யோக்தானின் மகன்களாவார்கள்.
24 சேம், அர்பக்சாத், சாலா, 25 ஏபேர், பேலேகு, ரெகூ, 26 செரூகு, நாகோர், தேராகு, 27 ஆபிராமாகிய ஆபிரகாம் ஆகியோர்.
ஆபிரகாமின் குடும்பம்
28 ஈசாக்கும், இஸ்மவேலும் ஆபிரகாமின் மகன்களாவார்கள். 29 கீழ்க்கண்டவர்கள் இவர்களது சந்ததியாவார்கள்:
இஸ்மவேலின் மூத்த மகனான நெபாயோத், மற்ற மகன்களான கேதார், அத்பியேல், மிப்சாம், 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா, ஆகியோர்.
32 கேத்தூராள் ஆபிரகாமின் பெண் வேலைக்காரி. சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா ஆகியோர் இவளது பிள்ளைகள். சேபாவும் தேதானும் யக்ஷானின் பிள்ளைகள்.
33 ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா ஆகியோர் மீதியானின் மகன்கள். இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் சந்ததியார்.
Isaac’s Descendants சாராளின் மகன்கள்
34 ஆபிரகாம் ஈசாக்கின் தந்தை. ஏசாவும், இஸ்ரவேலும் ஈசாக்கின் மகன்கள்.
35 எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு ஆகியோர் ஏசாவின் மகன்கள்.
36 தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு ஆகியோர் எலீப்பாசின் மகன்கள்.
37 நகாத், சேராகு, சம்மா, மீசா ஆகியோர் ரெகுவேலின் மகன்கள்.
சேயீரிடமிருந்து ஏதோமியர்கள்
38 லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் ஆகியோர் சேயீரின் மகன்கள்.
39 ஓரியும், ஓமாமும் லோத்தானின் மகன்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி ஆவாள்.
40 அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோர் சோபாலின் மகன்கள். அயாவும், ஆனாகும் சிபியோனின் மகன்கள்.
41 ஆனாகின் மகன்களில் திஷோனும் ஒருவன். அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் ஆகியோர் திஷோனின் மகன்கள்.
42 பில்கான், சகவான், யாக்கான் ஆகியோர் ஏத்சேரின் மகன்கள்.
ஊத்ஸ், அரான் ஆகியோர் திஷானின் மகன்கள்.
ஏதோமின் அரசர்கள்
43 இஸ்ரவேல் ஜனங்களை அரசனொருவன் ஆள்வதற்கு முன்பே ஏதோம் நிலத்தை பல அரசர்கள் ஆண்டு வந்தார்கள். அந்த அரசர்களின் பெயர்கள்:
பேயோரின் மகன் பேலா. இவனது நகரத்தின் பெயர் தின்காபா ஆகும்.
44 பேலா மரித்ததும் போஸ்ராவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் இவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
45 யோபாப் மரித்ததும், தேமானியரின் நாட்டானாகிய ஊசாம் புதிய அரசன் ஆனான்.
46 ஊசாம் மரித்த பின், பேதாதின் மகன் ஆதாத் அவனுக்குப் பதில் அரசன் ஆனான். இவன் மீதீயானியரை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தான். இவனது நகரத்தின் பெயர் ஆவீத் ஆகும்.
47 ஆதாத் மரித்த பின், மஸ்ரேக்கா ஊரைச் சேர்ந்த சம்லா அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
48 சம்லா மரித்த பின் சவுல் புதிய அரசன் ஆனான். இவன் ஐபிராத்து ஆற்றின் கரையில் உள்ள ரேகோபோத்தைச் சேர்ந்தவன்.
49 சவுல் மரித்த பின், அக்போரின் மகனான பாகாலானான் அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
50 பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவனுக்குப் பின் புதிய அரசன் ஆனான். இவனது நகரத்திற்கு பாகி என்று பெயரிடப்பட்டது. ஆதாத்தின் மனைவியின் பெயர் மெகேதபேல் ஆகும். மாத்திரேத்தின் மகள் மெகேதபேல் ஆவாள். மேசகாபின் மகள் மாத்திரேத் ஆவாள். பிறகு, ஆதாத் மரித்தான். 51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் திம்னா, அல்யா, எதேத். 52 அகோலிபாமா, ஏலா, பினோன், 53 கேனாஸ், தேமான், மிப்சார், 54 மக்தியேல், ஈராம் ஆகியோர் ஏதோமின் தலைவர்கள் ஆனார்கள்.
இஸ்ரவேலின் மகன்கள்
2 ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், 2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் ஆகியோர் இஸ்ரவேலின் மகன்களாவார்கள்.
யூதாவின் மகன்கள்
3 ஏர், ஓனான், சேலா ஆகியோர் யூதாவின் மகன்கள். இந்த மூன்றுபேரும் பத்சூவா பெற்ற பிள்ளைகள். இவள் கானான் நாட்டுப் பெண். யூதாவின் முதல் மகனான ஏர், கெட்டவனாக இருப்பதைக் கர்த்தர் கண்டார். அதனால் கர்த்தர் அவனை கொன்றுவிட்டார். 4 யூதாவின் மருமகளான தாமார் அவனுக்குப் பாரேஸ், சேரா எனும் இருவரைப் பெற்றாள். ஆக யூதாவுக்கு 5 மகன்கள் இருந்தார்கள்.
5 எஸ்ரோனும் ஆமூலும், பாரேசின் மகன்களாவார்கள். 6 சேராவுக்கு 5 மகன்கள். சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா ஆகியோர் ஆவார்கள்.
7 சிம்ரியின் மகன் கர்மீ. கர்மீயின் மகன் ஆகார். ஆகார் இஸ்ரவேலுக்குப் பல தொல்லைகளை வரவழைத்தவன். இவன் போரில் சில பொருட்களை எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் தேவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
8 அசரியா ஏத்தானின் மகன்.
9 யெர்மெயேல், ராம், கெலுபா ஆகியோர் எஸ்ரோனின் பிள்ளைகள்.
ராமின் சந்ததியினர்
10 ராம், அம்மினதாபின் தந்தை ஆவார். அம்மினதாப், நகசோனின் தந்தை ஆவார். நகசோன், யூத ஜனங்களின் பிரபு. 11 நகசோன் சல்மாவின் தந்தை. சல்மா போவாசின் தந்தை. 12 போவாஸ் ஓபேதின் தந்தை. ஓபேத் ஈசாயின் தந்தை. 13 ஈசாய் எலியாபின் தந்தை. இவன் அவனது மூத்த மகன். இவனது இரண்டாவது மகன் அபினதாப். இவனது மூன்றாவது மகன் சிம்மா. 14 இவனது நான்காவது மகன் நெதனெயேல், இவனது ஐந்தாவது மகன் ரதாயி. 15 இவனது ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது. 16 செருயாளும் அபிகாயிலும் இவர்களது சகோதரிகள். செருயாளிற்கு அபிசாய், யோவாப், ஆசகேல் என மூன்று மகன்கள். 17 அபிகாயில் அமாசாவின் தாய், இஸ்மவேலனாகிய யெத்தேர் அமாசாவின் தந்தை.
காலேப்பின் சந்ததியினர்
18 காலேப் எஸ்ரோனின் மகன். காலேபிற்கு பிள்ளைகளும் அசுபா என்ற மனைவியும் இருந்தனர். அசுபா எரீயோத்தின் மகள். ஏசேர், சோபாப், அர்தோன் ஆகியோர் அவனது பிள்ளைகளாவார்கள். 19 அசுபா மரித்ததும் காலேப் எப்ராத்தை மணந்துக் கொண்டான். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். அவர்கள் அவனுக்கு ஊர் என்று பெயரிட்டனர். 20 ஊர் ஊரியின் தந்தையானான். ஊரி பெசலெயேலின் தந்தையானான்.
21 பின்னர், எஸ்ரோனுக்கு அறுபது வயது ஆனதும், அவன் மாகீரின் மகளை மணந்துக் கொண்டான். மாகீர் கிலெயாத்தின் தந்தை. எஸ்ரோன் மாகீரின் மகளோடு பாலின உறவுகொண்டான். அவள் செகூப்பை பெற்றாள். 22 செகூப் யாவீரின் தந்தை. யாவீருக்கு கிலேயாத் நிலத்தில் 23 நகரங்கள் இருந்தன. 23 ஆனால் கேசூரும் ஆராமும் யாவீரின் ஊர்களை எடுத்துக்கொண்டார்கள். அவற்றுள் ஜாயிர் நகர் மற்றும் கேனாத் நகரும் அதனைச் சுற்றியுள்ள 60 சிற்றூர்களும் அடங்கும். இந்நகரங்களும் ஊர்களும் கிலேயாத்தின் தந்தையான, மாகீரின் மகன்களுக்கு உரியவை.
24 எஸ்ரோன் எப்ராத்தாவில் உள்ள ஊரான காலேப்பில் மரித்தான். மரித்த பிறகு, அவன் மனைவியான அபியாள் ஒரு மகனைப் பெற்றாள். அவனது பெயர் அசூர். அவன் தெக்கொவாவின் தந்தை.
யெர்மெயேலின் சந்ததியினர்
25 யெர்மெயேல் எஸ்ரோனின் முதல் மகன். யெர்மெயேலுக்கு ராம், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் ராம் மூத்த மகன். 26 யெர்மெயேலுக்கு, அத்தாராள் எனும் பேருடைய இன்னொரு மனைவியும் இருந்தாள். இவள் ஓனாமின் தாய்.
27 யெர்மெயேலின் மூத்தமகனான ராமிற்குப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மாஸ், யாமின், எக்கேர் ஆகியோராகும்.
28 ஓனாவிற்கு சம்மாய், யாதா என்ற பிள்ளைகள் இருந்தனர். சம்மாயிற்கு நாதாப், அபிசூர் எனும் பிள்ளைகள் இருந்தனர்.
29 அபிசூரின் மனைவியின் பெயர் அபியாயேல், அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அக்பான், மோளித் என்பவை அவர்களின் பெயர்.
30 சேலேத்தும், அப்பாயிமும் நாதாப்பின் மகன்கள். சேலேத் பிள்ளைப்பேறு இல்லாமலேயே மரித்துப் போனான்.
31 அப்பாயீமின் மகன் இஷி, இஷியின் மகன் சேசான், சேசானின் மகன் அக்லாய்
32 யாதா சம்மாயின் சகோதரன், யெத்தெரும் யோனத்தானும் யாதாவின் மகன்கள், யெத்தெர் பிள்ளைப்பேறு இல்லாமலே மரித்துப்போனாள்.
33 பேலேத்தும் சாசாவும் யோனத்தானின் மகன்கள். இதுவே யெர்மெயேலின் குடும்பப் பட்டியலாகும்.
34 சேசானுக்கு மகன்கள் இல்லை. அவனுக்கு குமாரத்திகளே இருந்தனர். சேசாறுக்கு எகிப்திலுள்ள யர்கா என்ற பேருள்ள வேலைக்காரன் இருந்தான். 35 சேசான் யர்காவைத் தன் மகள் மணந்துகொள்ளும்படி அனுமதித்தான். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் அத்தாயி.
36 அத்தாயி நாதானின் தந்தை, நாதான் சாபாத்தின் தந்தை, 37 சாபாத் எப்லாலின் தந்தை, எப்லால் ஓபேத்தின் தந்தை, 38 ஓபேத் ஏகூவின் தந்தை, ஏகூ அசரியாவின் தந்தை, 39 அசரியா ஏலேத்ஸின் தந்தை, ஏலேத்ஸ் எலெயாசாவின் தந்தை, 40 எலெயாசா சிஸ்மாயின் தந்தை, சிஸ்மாய் சல்லூமின் தந்தை, 41 சல்லூம் எக்கமியாவின் தந்தை, எக்கமியா எலிசாமாவின் தந்தை.
காலேபின் குடும்பம்
42 காலேப் யெர்மெயேலின் சகோதரன். காலேபின் முதல் மகன் மேசா. மேசா சீப்பின் தந்தை. மேசாவின் மற்றொரு மகன் மெரேசா. மெரேசா எப்ரோனின் தந்தை.
43 கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா ஆகியோர் எப்ரோனின் மகன்கள். 44 செமாராகிமின் தந்தை. ராகிம் யோர்க்கேயாமின் தந்தை. ரெக்கேம் சம்மாயின் மகன். 45 சம்மாய் மாகோனின் தந்தை, மாகோன் பெத்சூரின் தந்தை.
46 காலேபின் வேலைக்காரியாக எப்பாள் இருந்தாள். அவள் ஆரான், மோசா, காசே ஆகியோரின் தாய். ஆரான் காசேசின் தந்தை.
47 ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் ஆகியோர் யாதாயின் மகன்கள்.
48 மாகா காலேப்பின் இன்னொரு வேலைக்காரி. அவள் சேபேர் திர்கானா ஆகியோரின் தாயானாள். 49 மாகா, சாகாப், சேவா ஆகியோருக்கும் தாயானாள். சாகாப் மத்மன்னாவின் தந்தையானான். சேவா மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தந்தையானான். காலேபின் மகள் அக்சாள்.
50 இது காலேபின் சந்ததியாரின் விபரமாகும். ஊர், காலேபின் முதல் மகன். அவன் எப்ராத்தானிடம் பிறந்தான். கீரியாத் யாரீமை உருவாக்கிய சோபால், 51 பெத்லெகேமை உருவாக்கிய சல்மா, பெத்காதேரை உருவாக்கிய ஆரேப்பு ஆகியோர் ஊரின் மகன்கள் ஆவார்கள்.
52 சோபால் கீரியாத்யாரீமினை உருவாக்கியவன். இது சோபாலின் சந்ததியாரின் விபரம். ஆராவோ, ஆசியம் மெனுகோத்தின் பாதியளவு ஜனங்களும் 53 கீரியாத்யாரீமின் கோத்திரங்களும் எத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோர் ஆவார்கள். மிஸ்ராவியரிடமிருந்து சோராத்தியரும் எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.
54 இது சல்மா சந்ததியின் விபரமாகும்: பெத்லேகேம், நேத்தோபாத், அதரோத், பெத்யோவாப் ஆகிய நகர ஜனங்களும் மானாத்தியரில் பாதி ஜனங்களும் சோரியரில் பாதி ஜனங்களும், 55 யாபேசில் குடியிருந்த எழுத்தாளர்களின் குடும்பங்கள், திராத்தியரும், சிமாத்தியரும் சுக்காத்தியரும் ஆவர். பெத்ரேகாப்பின் தந்தையான அம்மாத்திலிருந்து வந்த கேனியர்களே கணக்கர்கள்.
தாவீதின் மகன்கள்
3 தாவீதின் சில மகன்கள், எப்ரோன் என்னும் நகரத்திலே பிறந்தனர். இது தாவீதின் மகன்களின் விபரம்.
தாவீதின் முதல் மகன் அம்னோன். அம்னோனின் தாய் அகிநோவாம். அவள் யெஸ்ரேயேல் எனும் ஊரினள்.
இரண்டாவது மகனின் பெயர் தானியேல் ஆகும். இவனது தாயின் பெயர் அபிகாயேல். இவள் கர்மேல் யூதா எனும் ஊரினள்.
2 மூன்றாவது மகன் அப்சலோம். இவனது தாய் மாக்கா. இவள் தல்மாயின் மகள். தல்மாய் கேசூரின் அரசன்.
நான்காவது மகன் அதோனியா. இவனது தாய் ஆகீத்.
3 ஐந்தாவது மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தாள்.
ஆறாவது மகன் இத்ரேயாம். இவனது தாய் எக்லாள். இவளும் தாவீதின் மனைவி தான்.
4 இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் தாவீதிற்குப் பிறந்தவர்கள். தாவீது, எப்ரோனில் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆண்டான். தாவீது எருசலேமில் 33 ஆண்டுகள் அரசாண்டான். 5 கீழ்க்கண்டவர்கள் தாவீதிற்கு எருசலேமில் பிறந்த மகன்கள்:
பத்சுவாளுக்கு, நான்கு மகன்கள் பிறந்தனர். இவள் அம்மியேலின் மகள். சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் ஆகியோர் பத்சுவாளின் மகன்கள். 6-8 இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், நோகா, நேபேக், யப்பியா, எலிசாமா, எலியாதா, எலிபேலேத் ஆகிய ஒன்பது பேரும் தாவீதின் மகன்களே. 9 தாவீது தனது பிற மகன்களைத் தனது வைப்பாட்டிகளிடம் பெற்றெடுத்தான். தாமார் தாவீதின் மகளாவாள்.
தாவீதின் காலத்திற்குப் பிறகு வந்த யூத அரசர்கள்
10 ரெகொபெயாம் சாலொமோனின் மகன். ரெகொபெயாமின் மகன் அபியா. அபியாவின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத். 11 யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் அகசியா, அகசியாவின் மகன் யோவாஸ். 12 யோவாஸின் மகன் அமத்சியா, அமத்சியாவின் மகன் அசரியா, அசரியாவின் மகன் யோதாம். 13 யோதாவின் மகன் ஆகாஸ், ஆகாஸின் மகன் எசேக்கியா, எசேக்கியாவின் மகன் மனாசே. 14 மனாசேயின் மகன் ஆமோன், ஆமோனின் மகன் யோசியா.
15 யோசியாவின் மகன்களின் பட்டியல் இது: முதல் மகன் யோகனான். இரண்டாம் மகன் யோயாக்கீம். மூன்றாம் மகன் சிதேக்கியா. நான்காம் மகன் சல்லூம்.
16 யோயாக்கீமின் மகன் எகொனியா. இவனது மகன் சிதேக்கியா. [a]
பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு தாவீதின் குடும்பம்
17 எகொனியா பாபிலோனியாவில் கைதியாக இருந்த பிறகு அவனுக்கு மகன்கள் பிறந்தனர். சாலாத்தியேல். 18 மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா ஆகியோர்கள் அவர்கள்.
19 செருபாபேல், சிமேயி ஆகியோர் பெதாயாவின் மகன்கள். மெசுல்லாம், அனனியா ஆகியோர் செருபாபேலின் மகன்கள். செலோமீத் இவர்களின் சகோதரி. 20 செருபாபேலுக்கு மேலும் ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசா பேசேத் ஆகியோராவர்.
21 அனனியாவின் மகன் பெலத்தியா. எசாயா இவனது மகன் ரெபாயா. ரெபாயாவின் மகன் அர்னான். இவனது மகன் ஒபதியா. ஒபதியாவின் மகன் செக்கனியா.
22 இது செக்கனியாவின் சந்ததியினரின் பட்டியல்: இவனது மகன் செமாயா. செமாயாவிற்கு அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் எனும் ஆறு மகன்கள் இருந்தனர்.
23 எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் எனும் மூன்றுபேரும் நெயாரியாவின் மகன்கள்.
24 ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி எனும் ஏழு பேரும் எலியோனாயின் மகன்கள்.
25 உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். 26 பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். 27 அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார்.
28 “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். 29 அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.
30 “நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன்.
யூதர்களிடம் இயேசு பேசுதல்
31 “நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 32 ஆனால் என்னைக்குறித்து மக்களிடம் சொல்லுகிற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச் சொல்வது உண்மையென்று எனக்கும் தெரியும்.
33 “நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான். 34 மக்களுக்கு என்னைப்பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன். 35 யோவான் எரிந்து ஒளியைக் கொடுக்கிற ஒரு விளக்கைப்போன்றிருந்தான். நீங்கள் அவனது ஒளியைப் பெற்று சில காலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.
36 “ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன. 37 என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை. 38 பிதாவின் அறிவுரை உங்களில் வாழ்வதுமில்லை. ஏனென்றால் பிதா அனுப்பிய ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 39 நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. 40 ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.
41 “நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை. 42 ஆனால் நான் உங்களை அறிவேன். தேவனுடைய அன்பு உங்களில் இல்லை என்பதையும் அறிவேன். 43 நான் என் பிதாவிடமிருந்து வந்திருக்கிறேன். நான் அவருக்காகப் பேசுகிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். வேறொருவன் வந்து அவன் தனக்காகவே பேசினால் அவனை ஏற்றுக்கொள்கிறீர்கள். 44 நீங்கள் உங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் விருப்பம்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பாராட்டைப் பெற முயற்சி செய்வதில்லை. ஆகையால் நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? 45 நான் பிதாவின் முன்னால் நின்று உங்களைக் குற்றம் சொல்வேன் என்று நினைக்கவேண்டாம். மோசேதான் உங்கள் குறைகளைச் சொல்கிறவன். மோசே மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். 46 நீங்கள் உண்மையிலேயே மோசேயை நம்பினீர்களானால் என்னிலும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான். 47 ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.
2008 by World Bible Translation Center