Old/New Testament
இசக்காரின் சந்ததியினர்
7 இசக்காருக்கு 4 மகன்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் ஆகிய பெயர்களுண்டு.
2 ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் ஆகியோர் தோலாவின் மகன்கள். அவர்கள் அனைவரும் தம் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். அவர்களும் அவர்களின் சந்ததிகளும் மிகப் பலமுள்ளவர்களாயிருந்தனர். தாவீது அரசனாகும் காலம்வரை அவர்களின் குடும்பம் வளர்ந்தது. அவர்களில் 22,600 பேர் போர் செய்ய தயாரானவர்கள்.
3 ஊசியாவின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா. இஸ்ரகியாவுக்கு மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா ஆகிய மகன்கள் இருந்தனர். இந்த 5 பேரும் அவர்களின் குடும்பத் தலைவராக இருந்தனர். 4 இவர்களில் 36,000 பேர் போர் செய்யத் தகுதியுடைய வீரர்களாக இருந்தனர் என வம்ச வரலாறு கூறும். அவர்கள் ஏராளமான மனைவியரும், பிள்ளைகளும் பெற்றதால் குடும்பம் பெரிதாயிற்று.
5 இசக்காரின் கோத்திரங்களில் ஆக மொத்தம் 87,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர் என்று குடும்ப வரலாறு கூறுகிறது.
பென்யமீனின் சந்ததியினர்
6 பேலா, பெகேர், யெதியாயேல் எனும் மூன்று பேரும் பென்யமீனின் மகன்கள்.
7 பேலாவிற்கு எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி எனும் மகன்கள் இருந்தனர். இவர்கள் தத்தம் குடும்பங்களின் தலைவர்களாக இருந்தனர். இவர்களிடம் 22,034 வீரர்கள் இருந்தார்கள் என குடும்ப வரலாறு கூறுகிறது.
8 செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனாதோத், அதுமேத் ஆகியோர் பெகேரின் மகன்கள். இவர்கள் பெகேரின் பிள்ளைகள். 9 இவர்களின் குடும்ப வரலாறு குடும்பத் தலைவர்களைப்பற்றி கூறுகிறது. இவர்களிடம் 20,200 வீரர்கள் இருந்தனர் என்பதை குடும்ப வரலாறு காட்டுகிறது.
10 யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான். ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் ஆகியோர் பில்கானின் மகன்கள். 11 யெதியாயேலின் மகன்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் போருக்குத் தயாராக 17,200 வீரர்கள் இருந்தனர்.
12 சுப்பீமியர்களும், உப்பீமியர்களும் ஈரின் சந்ததியினர். ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
நப்தலியின் சந்ததியினர்
13 யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் ஆகியோர் நப்தலியின் மகன்கள்.
இவர்கள் பில்காளியின் சந்ததியினர்.
மனாசேயின் சந்ததியினர்
14 கீழ்க்கண்டவர்கள் மனாசேயின் சந்ததியினர்: மனாசே அராமிய வேலைக்காரி மூலம் அஸ்ரியேல் என்ற மகன் பிறந்தான். அவர்களுக்கு மாகீர் என்ற மகனும் இருந்தான். இவன் கீலேயாத்தின் தந்தை. 15 மாகீர் உப்பீமியர் மற்றும் சுப்பீமியர்களிடமிருந்தும் ஒரு பெண்ணை மணந்துக்கொண்டான். அவளது பெயர் மாக்காள். மாகீரின் சகோதரியின் பெயரும் மாக்காள். மாக்காளின் இரண்டாவது மனைவியின் பெயர் செலோப்பியாத். செலோப்பியாத்திற்கு மகள்கள் மட்டுமே இருந்தார்கள். 16 மாகீரின் மனைவியான மாக்காளிற்கு ஒரு மகன் இருந்தான். மாக்காள் தனது மகனுக்குப் பேரேஸ் என்று பெயரிட்டாள். பேரேஸின் சகோதரனின் பெயர் சேரேஸ். சேரேசுக்கு, ஊலாம், ரேகேம் எனும் மகன்கள் இருந்தனர்.
17 ஊலாம் மகன் பேதான்.
இவர்கள் கீலேயாத்தின் சந்ததியினர். கீலேயாத் மாகீரின் மகன். மாகீர் மனாசேயின் மகன். 18 மாகீரின் சகோதரியான அம்மொளெகேத்திற்கு இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோர் மகன்கள்.
19 அகியான், சேகேம், லிக்கே, அனியாம் ஆகியோர் செமிதாவின் மகன்கள்.
எப்பிராயீமின் சந்ததியினர்
20 கீழ்க்கண்டவை எப்பிராயீமின் சந்ததியினரின் பெயர்கள். எப்பிராயீமின் மகன் சுத்தெலாக். எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக், சுத்தெலாக்கின் மகன் பேரேத், பேரேத்தின் மகன் தாகாத் 21 தாகாத்தின் மகன் எலாதா, எலாதாவின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் சாபாத், சாபாத்தின் மகன் சுத்தெலாக்.
காத் நகரில் வளர்ந்த சிலர் எத்சோர், எலீயாத் ஆகியோரை கொன்றனர். எசேரும், எலீயட்டும் ஆடு மாடுகளைத் திருடும்பொருட்டு காத் நகருக்குச் சென்றார்கள் என்னும் காரணத்தால் இவர்கள் கொல்லப்பட்டார்கள். 22 எத்சேர், எலீயாத் ஆகியோரின் தந்தை எப்பிராயீம். இவர்கள் மரித்துப் போனதால் இவன் அதிக நாட்கள் துக்கம் கொண்டாடினான். எப்பிராயீமின் குடும்பத்தினர் வந்து ஆறுதல் சொன்னார்கள். 23 பிறகு, இவன் தன் மனைவியோடு பாலின உறவு கொண்டான். அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெற்றாள். அவன் தன் மகனுக்குப் பெரீயா என்று பெயர் வைத்தான். ஏனென்றால் அவன் பிறந்தபொழுது குடும்பத்துக்குப் பல தீங்குகள் ஏற்பட்டன. 24 எப்பிராயீமின் மகள் பெயர் சேராள். இவள் கீழ்பெத்ரோன், மேல் பெத்ரோன், கீழ் ஊசேன் சேரா, மேல் ஊசேன் சேரா ஆகியவற்றைக் கட்டினாள்.
25 எப்பிராயீமின் மகன் ரேப்பாக், ரேப் பாக்கின் மகன் ரேசேப், ரேசேப்பின் மகன் தேலாக், தேலாக்கின் மகன் தாகான். 26 தாகானின் மகன் லாதான், லாதானின் மகன் அம்மியூத், அம்மியூத்தின் மகன் எலிஷாமா 27 எலிஷாமாவின் மகன் நூன், நூனின் மகன் யோசுவா.
28 கீழ்க்கண்ட நகரங்களிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எப்பிராயீமின் சந்ததியினர் குடியிருந்தனர். அவை, பெத்தேலும், அதைச் சார்ந்த கிராமங்களும், கீழ்ப்புறமுள்ள நாரானும், மேற்கேயுள்ள கேசேரும், அதைச் சார்ந்த கிராமங்களும், சீகேமும் அதைச் சார்ந்த கிராமங்களும், அய்யாவரையுள்ள இடங்களும் அதைச் சார்ந்த கிராமங்களும். 29 மனாசே ஜனங்களின் எல்லையுள்ள மெத்செயானும், அதைச் சார்ந்த கிராமங்களும் தானாக், மெகிதோ, தோர் ஆகிய நகரங்களும் அவற்றின் அருகில் உள்ள சிறு நகரங்களும். இவ்விடங்களில் யோசேப்பின் சந்ததியினர் குடியிருந்தார்கள். யோசேப்பு இஸ்ரவேலின் மகன்.
ஆசேரின் சந்ததியினர்
30 இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா ஆகியோர் ஆசேரின் மகன்கள். இவர்களது சகோதரியின் பெயர் சேராள்.
31 ஏபேர், மல்கியேல் ஆகியோர் பெரீயாவின் மகன்கள், மல்கியேல் பிர்சாவீத்தின் தந்தை.
32 ஏபேர், யப்லோத்தையும் சோமேரையும் ஒத்தாமையும் இவர்களின் சகோதரியான சூகாளையும் பிள்ளைகளாகப் பெற்றான்.
33 யப்லேத்திற்குப் பாசாக், பிம்மால், அஸ்வாத் ஆகிய மகன்கள் பிறந்தனர். இவர்கள் யப்லோத்தின் பிள்ளைகள்.
34 அகி, ரோகா, எகூபா, ஆராம் ஆகியோர் சோமேரின் மகன்கள்.
35 சோமேரின் சகோதரன் ஏலேம். சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் ஆகியோர் ஏலேமின் மகன்கள்.
36 சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா.
37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா ஆகியோர் சோபாக்கின் மகன்கள்.
38 யெத்ரேனுக்கு எப்புனே, பிஸ்பா, ஆரா ஆகிய மகன்கள் இருந்தனர்.
39 உல்லாவிற்கு ஆராக், அன்னியேல், ரித்சியா ஆகிய மகன்கள் இருந்தனர்.
40 இவர்கள் அனைவரும் ஆசேரின் சந்ததியினர். இவர்கள் குடும்பத் தலைவர்கள், இவர்கள் மகத்தான மனிதர்கள், இவர்கள் வலிமைமிக்க வீரர்கள், திறமைமிக்க வீரர்களான இவர்களில் 26,000 பேர் போர் செய்வதற்குத் தயாரான வீரர்களாக இருந்தார்கள்.
சவுல் அரசனின் குடும்ப வரலாறு
8 பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா பென்யமீனின் மூத்த மகன், அஸ்பால் பென்யமீனின் இரண்டாவது மகன். அகராக் பென்யமீனின் மூன்றாவது மகன். 2 நோகா, பென்யமீனின் நான்காவது மகன். ரப்பா, பென்யமீனின் ஐந்தாவது மகன்.
3-5 ஆதார், கேரா, அபியூத், அபிசுவா, நாமான், அகோவா, கேரா, செப்புப்பான், ஊராம் ஆகியோர் பேலாவின் மகன்கள்.
6-7 இவர்கள் ஏகூதின் சந்ததியினர். கேபாவின் குடும்பங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இவர்கள், தம் வீடுகளை விட்டு விட்டு மனாகாத்துக்குப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நாமான், அகியா, கேரா ஆகியோர் ஏகூதின் சந்ததியினர். கேரா இவர்களைக் கட்டாயமாக வீட்டைவிட்டு அழைத்துச்சென்றான். ஊசா, அகியூத் ஆகியோர் தந்தையானான் கேரா.
8 மோவாப்பில் சகாராயீம் தன் மனைவிகளான ஊசிம், பாராள் ஆகியோரை விவாகரத்து செய்தான். பின்னர் பிற மனைவியோடு சில பிள்ளைகளைப் பெற்றான். 9-10 சகாராயீம் தன் மனைவியான ஓதேசாலிடம் யோவாப், சீபியா, மேசா, மல்காம், எயூஸ், சாகியா, மிர்மா, ஆகிய பிள்ளைகளைப் பெற்றான். இவர்கள் சகாராயீமின் மகன்கள். 11 சகாராயிமுக்கும் ஊசீமுக்கும் இரண்டு மகன்கள். அவர்களின் பெயர் அபிதூப், எல்பால்.
12-13 எல்பாலின் மகன்களாக ஏபேர், மீஷாம், சாமேத், பெரீயா, சேமா ஆகியோர் பிறந்தனர். சாமேத் ஓனா, லோத் ஆகிய நகரங்களையும், லோத்தைச் சுற்றிலும் சிறிய ஊர்களையும் உருவாக்கினான். பெரீயாவும், சேமாவும் ஆயயோன் ஜனங்களின் தலைவர்களாயிருந்தனர். இவர்கள் காத்தியர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.
14 பெரீயாவின் மகன்களாக சாஷாக், ஏரேமோத், 15 செபதியா, ஆராத், ஆதேர், 16 மிகாயேல், இஸ்பா, யோகா ஆகியோர் பிறந்தனர். 17 எல்பாலின் மகன்களாக செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ரபேர், 18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் ஆகியோர் பிறந்தனர்.
19 சிமேயின் மகன்களாக யாக்கீம், சிக்ரி, சப்தி, 20 எலியேனாய், சில்தாய், எலியேல், 21 அதாயா, பெராயா, சிம்ராத், ஆகியோர் பிறந்தனர்.
22 சாஷாக்கின் மகன்களாக இஸ்பான், ஏபேர், ஏலியேல், 23 அப்தோன், சிக்ரி, ஆனான், 24 அனனியா, ஏலாம், அந்தோதியா, 25 இபிதியா, பெனூயேல் ஆகியோர் பிறந்தனர்.
26 எரொகோமின் மகன்களாகச் சம்சேராய், செகரியா, அத்தாலியா, 27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் பிறந்தனர்.
28 இவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள். இவர்களின் வம்ச வரலாற்றில் அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
29 யேயேல் கிபியோனின் தந்தை. இவன் கிபியோனில் குடியிருந்தான். யேயேலின் மனைவியின் பெயர் மாக்காள். 30 இவனது மூத்த மகன் அப்தோன், மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப், 31 கேதோர், அகியோ, சேகேர் ஆகியோர். 32 மிக்லோத், சிமியாவின் தந்தை. இப்பிள்ளைகள் எருசலேமில் தம் உறவினர்களோடு வாழ்ந்தனர்.
33 நேர், கீசின் தந்தை, கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான் மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தந்தை.
34 யோனத்தானின் மகன் மேரிபால், மேரி பாலின் மகள் மீகா. 35 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் ஆகியோர்.
36 ஆகாஸ் யோகதாவின் தந்தை. யோகதா, அலமேத்துக்கும் அஸ்மாவேத்துக்கும் சிம்ரிக்கும் தந்தை. சிம்ரி மோசாவின் தந்தை. 37 மோசா, பினியாவின் தந்தை, பினியா, ரப்பாவின் தந்தை. ரப்பா, எலியாசாவின் தந்தை. எலியாசா, ஆத்சேலின் தந்தை.
38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள். அவர்களின் பெயர்: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.
39 ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் மகன் ஊலாம், அவனது இரண்டாவது மகன் ஏகூஸ், அவனது மூன்றாவது மகன் எலிபேலேத். 40 ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாக வில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும்.
இவர்கள் அனைவரும் பென்யமீனின் சந்ததியினர் ஆவார்கள்.
9 இஸ்ரவேலர்களின் பெயர்கள் எல்லாம் குடும்ப வரலாற்றில் சேர்க்கப்பட்டது. அந்த குடும்பங்களின் வரலாறு இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
எருசலேம் ஜனங்கள்
யூதாஜனங்கள் கைதிகளாக்கப்பட்டு பாபிலோனுக்குப் பலவந்தமாகக் கொண்டுப் போகப்பட்டார்கள். அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாதபடியால் அந்த இடத்துக்குக் கொண்டுப் போகப்பட்டார்கள். 2 சில இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயத்தில் பணியாற்றும் வேலையாட்களும் முதலில் அங்கு திரும்பி வந்து தங்கள் சொந்த நிலங்களிலும் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
3 எருசலேமில் வாழ்ந்த யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகிய கோத்திரங்களைச் சார்ந்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:
4 ஊத்தாய் அம்மியூதியின் மகன். அம்மியூதி உம்ரியின் மகன். உம்ரி இம்ரியின் மகன். இம்ரி பானியின் மகன். பானி பேரேசின் சந்ததியைச் சேர்ந்தவன். பேரேஸ் யூதாவின் மகன்.
5 எருசலேமில் வாழ்ந்த சேலாவின் ஜனங்கள்: அசாயா மூத்த மகன். இவனுக்கும் மகன்கள் இருந்தனர்.
6 எருசலேமில் வாழ்ந்த சேராவின் ஜனங்கள், அவர்கள் யெகுவேலும், அவர்களின் உறவினர்களும். அவர்கள் மொத்தம் 690 பேர்.
7 எருசலேமில் வாழ்ந்த பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள்: சல்லு மெசுல்லாவின் மகன். மெசுல்லா ஓதாவியாவின் மகன், ஓதாவியா அசெனூவாவின் மகன். 8 இப்னெயா எரோகாமின் மகன். ஏலா ஊசியின் மகன். ஊசி மிக்கிரியின் மகன். மெசுல்லாம் செபதியாவின் மகன். செபதியா ரேகுவேலின் மகன்.ரேகுவேல் இப்னியாவின் மகன். 9 பென்யமீன் குடும்ப வரலாறானது, அவர்கள் 956 பேர் எருசலேமில் வாழ்ந்ததாகக் கூறுகின்றது. அவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள்.
10 எருசலேமில் வாழ்ந்த ஆசாரியர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின், 11 அசரியா. அசரியா இல்க்கியாவின் மகன். இல்க்கியா மெசுல்லாவின் மகன். மெசுல்லா சாதோக்கின் மகன். சாதோக் மெராயோதின் மகன். மெராயோது அகிதூபின் மகன். இவன் தேவனுடைய ஆலயத்தில் மிக முக்கியமான அதிகாரியாக இருந்தான். 12 அதோடு எரோகாமின் மகனான அதாயாவும் அங்கே வாழ்ந்தான். எரோகாம் பஸ்கூவின் மகன். பஸ்கூ மல்கியாவின் மகன். ஆதியேலின் மகனான மாசாயும் அங்கிருந்தான். ஆதியேல் யாசெராவின் மகன். யாசெரா மெசுல்லாமின் மகன். மெசுல்லாம் மெசிலேமித்தின் மகன். மெசிலேமித் இம்மெரின் மகன்.
13 அங்கே 1,760 ஆசாரியர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிசெய்யும் பொறுப் பாளர்களாகவும் இருந்தனர்.
14 எருசலேமில் வாழ்ந்த லேவியர் கோத்திரத்தைச் சேர்ந்த ஜனங்களின் பட்டியல்: செமாயா அசூபின் மகன். அசூப் அஸ்ரீகாமுவின் மகன். அஸ்ரீகாமு அசபியாவின் மகன். அசபியா மெராரியின் சந்ததியைச் சேர்ந்தவன். 15 பக்பக்கார், ஏரேஸ், காலால், மத்தானியா ஆகியோரும் எருசலேமில் வாழ்ந்து வந்தார்கள். மத்தானியா மிக்காவின் மகன். மிக்கா சிக்ரியின் மகன். சிக்ரி ஆசாப்பின் மகன். 16 ஒபதியா செமாயாவின் மகன். செமாயா காலாலின் மகன். காலால் எதுத்தூனின் மகன். எருசலேமில் ஆசாவின் மகனான பெர்கியா வாழ்ந்தான். ஆசா எல்க்கானாவின் மகன். எல்க்கானா நெத்தோபாத்தியரின் சிறு நகரங்களில் வாழ்ந்தான்.
17 எருசலேமில் வாழ்ந்த காவலாளர்கள்: சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் ஆகியோரும் அவர்களது உறவினருமே. அவர்களின் தலைவனாகச் சல்லூம் இருந்தான். 18 சிலர் கிழக்கே இருக்கிற இராஜாவின் வாசலைக் காவல் காத்தனர். இவர்கள் லேவியரின் கோத்திரத்தின் வழிவந்த காவல்காரர்கள். 19 சல்லூம், கோரேயின் மகன். கோரே, எபியாசாவின் மகன். எபியாசா, கோராகின் மகன், சல்லூம் மற்றும் அவனது சகோதரர்கள் வாசலைக் காத்தனர். அவர்கள் கோராகின் வம்சத்தில் வந்தவர்கள். அவர்களுக்குப் பரிசுத்தக் கூடார வாசலைக் காவல் காப்பது வேலை ஆயிற்று. அதனை அவர்கள் அவர்களின் முற்பிதாக்கள் செய்தது போன்றே செய்து வந்தனர். 20 முன்பு பினேகாசு வாசலைக் காக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தான். பினேகாசு, எலியாசாரின் மகன். கர்த்தர் பினேகாசோடு இருந்தார். 21 மெசெலமியாவின் மகனான சகரியா பரிசுத்தக் கூடாரத்தின் வாயிலின் காவல்காரனாய் இருந்தான்.
22 பரிசுத்தக் கூடார வாசலைக் கண்காணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 212. அவர்களின் பெயர்கள் சிறு நகரங்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. நம்பிக்கைக்கு உரிய அவர்களை தாவீதும் சீயர் ஆகிய சாமுவேலும் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். 23 இந்த வாயில் காவலர்களும் அவர்களது சந்ததியினரும் கர்த்தருடைய ஆலயமாகிய பரிசுத்தக் கூடாரத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்று வந்தனர். 24 வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பக்கமும் 4 வாசல்கள் இருந்தன. 25 சில நேரங்களில் வாயில் காவலர்களின் உறவினர்கள் சிறு நகரங்களிலிருந்து வந்து அவர்களுக்குக் காவல் பணிக்கு உதவி செய்தனர். அவர்கள் வருகைதந்த ஒவ்வொரு முறையும் ஏழு நாட்கள் வாயில் காவலர்களுக்கு உதவினார்கள்.
26 நான்கு வாசல் காவலர்களுக்கும், நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய ஆலயத்தின் பண்டகச்சாலை மற்றும் கருவூலங்களைக் காக்கும் பொறுப்பு இருந்தது. 27 அவர்கள் தேவனுடைய ஆலயத்தில் இரவில் தங்கியிருந்து காத்தனர். ஒவ்வொரு நாள் காலையிலும் தேவாலயத்தைத் திறப்பதும் அவர்களின் வேலையாய் இருந்தது.
28 சில வாசல் காவலர்களுக்கு, ஆலய பணிக்குரிய பாத்திரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருந்தது. அவர்கள் அவற்றை எண்ணிப்பார்த்தே வெளியே எடுப்பதும் உள்ளே வைப்பதுமாய் இருந்தனர். 29 வேறு சில வாசல் காவலர்கள், மற்ற இருக்கை போன்றவற்றையும் பரிசுத்தமான பாத்திரங்களையும் கவனித்துக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு மெல்லிய மா, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பாளிகளாயினர். 30 வாசனைப் பொருட்களால் சிறப்பான தைலத்தைக் கலக்கும் வேலையைச் சில ஆசாரியர்கள் செய்து வந்தனர்.
31 ஒரு லேவியனின் பெயர் மத்தித்தியா. பலியிடுவதற்காக அப்பம் சுடுகிற வேலை அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சல்லூமின் மூத்த மகன் மத்தித்தியா. சல்லூம், கோரகியா குடும்பத்தில் வந்தவன். 32 சில வாசல் காப்பவர்கள் கோரகியா குடும்பத்தினர். அவர்களுக்கு ஓய்வு நாள்தோறும் அப்பங்களைத் தயாரித்து மேஜையின் மேல் அடுக்கும் பணி கொடுக்கப்பட்டது.
33 லேவியர்களில் பாடுபவர்களும் குடும்பத் தலைவர்களும் ஆலயத்தில் உள்ள அறைகளில் தங்கி இருந்தனர். அவர்கள் வேறு வேலைகளைச் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இரவும் பகலும் ஆலயத்தில் வேலை இருந்தது.
34 இந்த லேவியர்கள் அனைவரும் அவரவர்கள் குடும்பங்களுக்கு தலைவர்களாக இருந்தனர். தம் குடும்ப வரலாற்றில் குடும்பத் தலைவர்களாக அவர்கள் விவரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
சவுல் அரசனின் குடும்ப வரலாறு
35 யெகியேல், கிபியோனின் தந்தை. யெகியேல், கிபியோன் நகரில் வாழ்ந்தான். யெகியேலின் மனைவியின் பெயர் மாக்காள். 36 யெகியேலின் மூத்த மகனின் பெயர் அப்தோன். மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், 37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் ஆகியோர். 38 மிக்லோத், சிமியாமின் தந்தை. யெகியேலின் குடும்பம், அவர்களது உறவினர்களோடு எருசலேமில் வாழ்ந்து வந்தது.
39 நேர் கீஸின் தந்தை. கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரைப் பெற்றான்.
40 யோனத்தானின் மகன் மெரிபால். மெரிபால் மீகாவின் தந்தை.
41 மீகாவிற்கு பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் எனும் மகன்கள் இருந்தனர். 42 ஆகாஸ் யாதாவின் தந்தை. யாதா யாராகின் தந்தை. யாராக் என்பவன் அலெமேத், அஸ்மவேத், சிம்ரி ஆகிய மகன்களைப் பெற்றான். சிம்ரி மோசாவின் தந்தை. 43 மோசா பினியாவின் தந்தை. பினியா ரப்பாயாவின் தந்தை. ரப்பாயா எலியாசாவின் தந்தை. எலியாசா ஆத்சேலின் தந்தை.
44 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகும். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.
மக்கள் இயேசுவைத் தேடுதல்
22 மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும்தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். 23 அப்போது திபேரியாவிலிருந்து சில படகுகள் வந்தன. அப்படகுகள், கர்த்தர் நன்றி சொன்னதற்குப் பின் மக்கள் உணவு உண்ட இடத்தின் அருகில் நின்றன. 24 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே இல்லை என்பதை மக்கள் அறிந்துகொண்டனர். ஆகையால் அவர்கள் படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றனர். அவர்கள் இயேசுவைக் காண விரும்பினர்.
ஜீவ அப்பமான இயேசு
25 கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், “போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டனர்.
26 “ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள். 27 பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார்.
28 “நாங்கள் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?” என்று மக்கள் இயேசுவிடம் கேட்டனர்.
29 “தேவனால் அனுப்பப்பட்ட ஒருவரை நீங்கள் நம்பவேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்கது என்று தேவன் விரும்புகிறார்” என இயேசு பதிலுரைத்தார்.
30 “தேவனால் அனுப்பப்பட்டவர் நீர்தான் என்பதை நிரூபிக்க என்ன அற்புதத்தை நீர் செய்யப் போகிறீர். நீர் செய்யும் அற்புதத்தைப் பார்க்க முடியுமெனில், அதற்குப் பின்னர் நாங்கள் உம்மை நம்புவோம். என்ன செய்யப் போகிறீர்? 31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ [a] என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.
32 “நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். 33 தேவனின் அப்பம் என்பது என்ன? பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து உலகத்துக்காக ஜீவனைத் தருகிற ஒருவர்தான் தேவனின் அப்பம்” என்றார் இயேசு.
34 “ஆண்டவரே, எப்பொழுதும் அந்த அப்பத்தை எங்களுக்குத் தாரும்” என்றனர் மக்கள்.
35 “நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். என்னிடம் வருகிற மனிதன் என்றென்றைக்கும் பசியோடு இருப்பதில்லை. என்மீது நம்பிக்கை வைக்கிற எவனும் எப்பொழுதும் தாகமாய் இருப்பதில்லை. 36 நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன். 37 எனது பிதா என் மக்களை எனக்குத் தந்திருக்கிறார். அம்மக்களில் ஒவ்வொருவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒவ்வொருவரையும் நான் ஏற்றுக்கொள்வேன். 38 நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை. 39 தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான். 40 குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். நான் அந்த மனிதர்களை இறுதி நாளில் எழுப்புவேன். இதுதான் எனது பிதாவின் விருப்பமும் ஆகும்” என்றார் இயேசு.
41 பிறகு யூதர்கள் இயேசுவைப்பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் “நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம்” என்று இயேசு சொன்னார். 42 அதற்கு யூதர்கள், “இவர் இயேசு. நாங்கள் இவரது தந்தையையும் தாயையும் அறிவோம். இயேசு யோசேப்பின் மகன். அவர் எப்படி நான் பரலோகத்திலிருந்து வந்தேன் என்று சொல்லலாம்?” என்று கேட்டனர்.
43 “ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். 44 என்னை அனுப்பியவர் அந்தப் பிதாதான். அவரே மக்களை என்னிடம் அழைத்து வருகிறவர். நான் இறுதி நாளில் அவர்களை எழுப்புவேன். என் பிதா என்னிடம் மக்களை அழைத்து வராவிட்டால், எவரும் என்னிடம் வர முடிவதில்லை.
2008 by World Bible Translation Center